எம்மை பற்றி

Tuesday, October 6, 2009

வணக்கம் ,
எமது வலைப்பதிவு தோழர்களே / தோழிகளே .

நமது அய்யா டிராபிக் ராமசாமி அவர்களை முன் உதாரனமாக கொண்டு அமையவுள்ளது இந்த வலை பதிவு. அவருக்கு ஏன் இந்த வேலை என்று பலர்போல் நிங்களும் சிந்திக்க வேண்டாம் . அனைத்துக்கும் அடிப்படை பொது நலம்.

தள்ளாத இந்த வயதினுளும் , நாம் இவரை போன்று பிறர்க்கு உதவி செய்வோம் என்பது சற்று சிந்திக்க கூட கடினமான ஒன்றாக இருக்கலாம் .

நமக்கு ஏன் இந்த வேலை என்று தங்கள் நினைக்க வேண்டாம். பாதிக்கப்பட்டது நீங்களாகவும் அல்லது பாதிக்க படபோறது நீங்களாகவும் கூட இருக்கலாம் .
சற்று சிந்தியுங்கள். ...!!!!

அய்யா இதுவரை சாதித்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவரை பற்றிய சிறு குறிப்பு .

( பெயர் : ராமசாமி
அகவை 73
ஒரு பிரபல பொதுநலசேவகர். பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து பல இந்த வலைப்பதிவில் வித்திட்டவர். வழக்குகளில் வக்கீல் வைக்காமல் தானே ஆஜராகி எதிர்த்தரப்பை தனது வாதத்தால் மடக்குபவர். இத்தனைக்கும் இவர் வக்கீல் கிடையாது. பலனை எதிர்பாராமல் தனது பொதுக் கடமையை செய்வதில் இவருக்கு நிகர் இவர்தான். ஊர்க்காவல் படையில் முன்பு இருந்தவர் ராமசாமி.
சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தை சீர்படுத்துவது இவரது பழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயரே வந்தது.

இவரது பல வழக்குகளால் கடுப்பான எதிர்த்தரப்பினர் பலமுறை ராமசாமியைத் தாக்கியுள்ளனர். ஆனாலும் சற்றும் அஞ்சாமல் தனது கடமையை தொடர்ந்து செய்து வருகிறார் ராமசாமி.

ராமசாமிக்கு ஆயுதப் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - விக்கிபீடியா )

முதல் மந்திரி முதல் கடைக்கோடி தமிழன் வரைக்கும் அறிந்தவர் அவரே .....
அவருக்கு சற்று (சில விசயங்களில் ) ஓய்வு அளிக்க விரும்பி , நீண்ட நாள் அவரது சேவை நமக்கு கிடைக்க வேண்டும் என்பதே இந்த வலைப்பதிவின் நோக்கமாகும் .

நமது அய்யாவின் வழயில்...
நமது சமுதாயத்தில் ஏற்படும் சில சமூக அவலங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தி சரியான நேர்கோட்டு பாதையில் பயணிக்க செய்யலாம் என்பதே இந்த வலைப்பதிவின் நோக்கமாகும் .

சில சமூக அவலங்களில் என்னை பாதித்த மற்றும் உங்களை பதிப்புககு உள்ளாக்கும் சில வகை சமூக அவலங்களை பிரதிபளிபதே இந்த வலைப்பதிவின் நோக்கமாகும் .

இந்த வலைப்பதிவில் கீழ் கண்ட பொருளடக்கமும் அடங்கும்

சமூகத்தில் நம்முடைய கடமை என்ன ??
சமுகம் (அரசு ) நமக்கு செய்ய வேண்டிய கடமை என்ன ?
கிடைக்க வில்லையெனில் என்ன செய்வது ?

பகிர்தல் முலமே நிறைய அனுபங்களை பெற இயலும் .
கருத்துக்களுக்கு
admin@tamilporali.co.cc
நேரடி அனுபவங்களுக்கு மற்றும் பதிவு செய்ய . kuttikasthuri.trafficmani@blogger.com
பார்வைக்கு
http://trafficmani.blogspot.com

அன்புடன்
டிராபிக் மணி.

2 comments:

ISR Selvakumar said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும், ஆதரவும் நிச்சயம் உண்டு.

ISR Selvakumar said...

உங்களுடைய பிளாகுடன் ஒரு டிவிட்டர் அக்கவுண்டை இணைத்துவிடுங்கள். நிச்சயம் அது மிக நல்ல பலன் தரும்.

Post a Comment